Categories
தேசிய செய்திகள்

WhatsApp வாடிக்கையாளர்களே!…. Font Size மாற்றணுமா?…. இதோ முழு விபரம்…..!!!!!

WhatsApp என்பது உலகின் மிகப் பெரிய தகவல் பரிமாற்ற செயலி ஆகும். இது உலகம் முழுவதும் உள்ள நபர்களை எளிதாக தொடர்புகொள்ள உதவும். இந்த வாட்ஸ்அப்பில் நமக்கு தெரியாத நாம் இதுவரையிலும் பயன்படுத்தாத பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. பொதுவாக ஸ்மார்ட்போனை கையாள்வது ஒருசில நேரங்களில் சிக்கலானதாக இருக்கும். குறிப்பாக சிறிய அல்லது பெரிய எழுத்துருக்களுடன் ஏதாவது ஒரு செயலியை பயன்படுத்துவது சிக்கல்களை உருவாகக்கூடும். எனினும் ஒருமொபைல் போனில் நாம் பயன்படுத்தும் அமைப்புகளின் எழுத்துருஅளவு WhatsApp அரட்டை எழுத்துருக்களை மாற்றாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆகவே எழுத்துருக்கள் மிக பெரியதாகவோ அல்லது மிக சிறியதாகவோ இருப்பதை கண்டறிந்து அதை உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்ற விரும்பினால் அதைச் சரிசெய்வதற்கு WhatsApp ஒரு அம்சத்தினை கொண்டுள்ளது. இது பயன்படுத்துவதற்கு மிக எளிது. இப்போது பயனாளர்கள் ஸ்மார்ட் போனில் WhatsApp எழுத்துருஅளவை மாற்ற கீழ்காணும் எளிய வழிமுறைகளை கடைபிடிக்கலாம். முதலாவதாக WhatsApp செயலியின் மெனு பொத்தானை தட்டி “அமைப்புகள்” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அந்த வ்சகையில் வாட்ஸ்அப் முகப்புத் திரையில் மேல் வலது மூலையிலுள்ள 3 செங்குத்து புள்ளிகளை தட்டி அமைப்புகள் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து “அரட்டை அமைப்புகள்” என்பதை கிளிக்செய்து அரட்டைப் பிரிவில் எழுத்துரு அளவு விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். தற்போது “எழுத்துரு அளவு” என்ற ஆப்ஷனில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய விருப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கும் பாப்அப்பை காண்பீர்கள். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்ததை பொறுத்து உரைஅளவு பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

Categories

Tech |