ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை விமர்ச்சித்ததால் அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வலிமை படத்தை விமர்சித்தது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. வலிமை திரைப்படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்தார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டரை வருடங்களாக வெளியாகாத நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் வலிமை படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளதாவது, “படத்தில் கதை என்று ஒன்று இல்லவே இல்லை. அஜித்தும் பழைய இந்தி பட ஹீரோ மாதிரி இருக்கிறார்.
PVR la enathan aachu?🤔 pic.twitter.com/3qeIlVsuwC
— Lokesh (@LokeshJey) March 17, 2022
இதெல்லாம் ஒரு படமுன்னு கல்யாண வீடு, எழவு வீடு என எல்லா இடத்திலையும் வலிமை அப்டேட் கேட்டுட்டு இருந்தாங்க” என விமர்சித்திருந்தார். இவரின் இந்த விமர்சனத்திற்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பி.வி.ஆர் சினிமாவில் ப்ளூ சட்டை மாறன் படம் பார்க்க வந்துள்ளார். அப்போது இவர் அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.