Categories
மாநில செய்திகள்

“இப்போ நீங்களும் இதுக்கு கை தட்டலாம்”…. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்….!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தனது வேளான் பட்ஜெட் உரையின் இடையே “இப்போ நீங்களும் இதுக்கு கை தட்டலாம்” என்று அதிமுகவினரை நோக்கி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியது அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது. தனது உரையில் பேசிய அவர் கரும்பு விவசாயிகளுக்காக பணம் கேட்டு நாங்கள் 10 ஆண்டுகள் போராடியும். கடந்த முறை அவர்களுக்கு ரூபாய் 150, இப்போது ரூபாய் 50 ஏற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Categories

Tech |