Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2022-23…. விவசாய பொருட்களுக்கான தொழிற்பேட்டை…. வெளியான அறிவிப்பு…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலையை பெறுவதை உறுதி செய்யும் அடிப்படையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை உருவாக்கப்படும். அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வகை வளர்ப்புக்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு. மிளகு, காப்பிக்கொட்டைகளை தரம்பிரிக்கும் மையம் நீலகிரியில் அமைக்கப்படும். தரமான அச்சு வெல்லம் தயாரிக்க 100 விவசாயிகளுக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும்.

Categories

Tech |