Categories
மாநில செய்திகள்

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

● இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.400 கோடி வழங்கப்படும்.
● இயற்கை விவசாயத்திற்கான இயற்கை உரங்கள் தயாரிக்க 100 குழுக்கள் உருவாக்கப்படும்.
● மண்புழு உள்ளிட்ட இயற்கை உரங்களைத் தயாரிக்க குழுக்கள் அமைத்து குழுவிற்கு தலா ஒரு லட்சம் நிதி வழங்கப்படும்.
●7,500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

Categories

Tech |