2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மாநில அளவிலான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண்மை மையம் அமைக்கப்படும். தென்னை, மா, வாழை, கொய்யா தோட்டங்களில் ஊடு பயிருக்காக ரூபாய் 27.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பங்களுக்கு ரூபாய் 25.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.