Categories
அரசியல்

” முதல்வர் தனி விமானம் மூலம் துபாய் பயணம்…!!”என்ன காரணம் தெரியுமா…???

2021 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து துபாயில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் ஒவ்வொரு நாடும் தங்களுடைய பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக தனி அரங்கம் அமைத்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார். அதில் தமிழகத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனி விமானம் மூலம் துபாய் பயணிக்க உள்ளார். மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் துபாய் செல்ல உள்ள முதல்வருடன் அதிகாரிகளும் செல்ல இருக்கின்றனர். அங்கு வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாடு நோக்கி ஈர்க்கும் பணிகளும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. பன்னாட்டு முதலீடுகளை தமிழ்நாடு நோக்கி ஈர்க்கும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் தமிழக பட்ஜெட் தாக்கலின் ஒருபகுதி ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |