அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவர் மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் இடை நின்ற மாணவர்கள் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு பாதியில் பள்ளியை விட்டு நின்ற மாணவர்களின் வீட்டிற்கு சென்று பள்ளிப்படிப்பைத் தொடர அறிவுரை வழங்குமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது தலைமை ஆசிரியர் முரளிதரன், உதவி தலைமை ஆசிரியர் உமாராணி, வருவாய் துறை அதிகாரி சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் வினிதா மகேந்திரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் ரிஷிவந்தியம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது. இந்த பள்ளியிலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தலைமை ஆசிரியர் ஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைராஜ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.