2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் அடிப்படையில் 59 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.