Categories
மாநில செய்திகள்

கடந்த ஆண்டு பட்ஜெட் “தவழும் மழலை”…. இந்த ஆண்டு நடக்கும் குழந்தை…. அமைச்சர் பெருமிதம்…!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. 2002- 23 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வேளாண்மைத் துறை நிதி நிலை அறிக்கையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேரவையில் உழவின் பெருமையை கூறும் குறளை மேற்கோள் காட்டி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக வேளாண்மைத் துறைக்கும் இரண்டாவது ஆண்டாக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அவர் ஆற்றிய உரையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் குறுவை சாகுபடி 4 லட்சத்து 96 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடைபெற்றது. நெல் சாகுபடி மொத்த அளவு 1.66 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

சென்ற ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை தவழும் மழலை. இந்த ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை நடக்கும் குழந்தை. இனிவரும் ஆண்டுகளில் வேளாண் நிதி நிலை அறிக்கை ஒடுகிற குழந்தையாய் இருக்கும் என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |