இந்தியா- வங்காளதேசம் இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்றின் காரணமாக இந்தியா- வங்காளதேசம் இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவையானது மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி மைத்ரீ எக்ஸ்பிரஸ் மற்றும் பந்தன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள மேற்கு வங்கம் ஜல்பைகுரியிலிருந்து டாக்கா செல்லும் மிதாலி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான பணிகளை மீண்டும் தொடங்குமாறு மத்திய ரயில்வே அமைச்சகம் வடகிழக்கு எல்லையோர ரயில்வேக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.