நைஜீரியாவில் மின் ஆற்றல் மற்றும் எண்ணெய் விநியோகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக விளங்கும் நைஜீரியாவில் பெட்ரோல் இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் போர் நெருக்கடியால் எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மின் ஆற்றல் மற்றும் எண்ணெய் விநியோகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் அதிக விலை கொடுத்து கள்ளச் சந்தையில் வாங்கும் நிலைக்கு ஓட்டுனர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பணவீக்க விகிதம் நைஜீரியாவில் 15.6 % எட்டியுள்ள நிலையில் உணவுப் பொருட்கள் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.