Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தலைமை…. நற்பண்பு வேணும்னா….. விளையாட்டில் ஆர்வம் செலுத்துங்க…. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி….!!

தலைமை பண்பு மற்றும் நற்பண்பை  வளர்த்துக்கொள்ள இளைஞர்கள் விளையாட்டில்  ஆர்வம் செலுத்த வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் கிரிக்கெட், கபடி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டுப் போட்டிக்கு அம்மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க பெரம்பலூர் மாவட்ட எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதையடுத்து  போட்டியில் பங்கேற்ற வாலிபர்களுக்கு தேவையான பந்து, கிரிக்கெட் மட்டை, க்ளவுஸ் உள்ளிட்டவற்றை போட்டியாளர்களிடம் வழங்கிவிட்டு போட்டியை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரம்பலூர்மாவட்டம் ஏற்கனவே விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது என்றும், மேற்கொண்டு பல சாதனைகளைப் படைக்க இந்த புதிய முயற்சி கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும்  தெரிவித்தார். மேலும் இன்றைய இளைஞர்களிடையே தலைமை பண்பை மேம்படுத்தவும், நற்பண்புகளை ஊக்குவிக்க பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |