தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட்கள் வெளிவராததுக்கான காரணம் தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிதளவில் வெற்றியடையவில்லை. இந்நிலையில் இவர் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் வாத்தி திரைப்படமும் நானே வருவேன் திரைப்படமும் குறித்து அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் திருச்சிற்றம்பலம் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. படத்தின் அறிவிப்பு மட்டுமே இதுவரையில் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் தனுஷ் டப்பிங் பணியையே முடித்து இருக்கின்றாராம்.
இத்திரைப்படமானது ஜூலை மாதம் ரிலீஸாகும் என செய்தி வந்திருக்கிறது. இந்த படத்தின் அப்டேட்களை வெளியிடாததற்கு காரணம் என்னவென்றால் அண்மையில் வெளியான தனுஷின் திரைப்படங்களுக்கு அடிக்கடி அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதனால் படம் சரியாக ஓடவில்லை என்ற காரணமும் இருக்கின்றது. இதனால் தனுஷ் இப்படத்தின் அப்டேட்டை படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பு வெளியிடலாம் என கூறி இருக்கிறாராம். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு இல்லாமல் படம் நல்லபடியாக அமையும் என தனுஷ் கூறியதாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.