கார் நிலைதடுமாறி பேருந்து உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாங்கோவில் அம்பாள் நகரில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தின் உரிமையாளர். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ரேவதியின் தம்பி பேரனுக்கு பெயர் வைக்கும் விழாவிற்காக ஜெகதீசன் தனது மனைவியுடன் காரில் சென்றுள்ளார். அப்போது ஆசாரிபட்டறை அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்துள்ளது.
இதில் ஜெகதீஷ்க்கு பலத்த காயமும், ரேவதிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஜெகதீசனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் ரேவதிக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.