சரக்கு வாகனம் மொபட் மீது மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பதினெட்டாம்படி கோவில் தெருவில் அண்டோராஜ் பெர்ணான்டோ (31) என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் கப்பல் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்டோராஜ் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றார். சம்பவத்தன்று அண்டோராஜ் மொபட்டில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதி வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று மொபட் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் அண்டோராஜ் துடி துடித்து உயிரிழந்துள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கேணிக்கரை போலீசார் அண்டோராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து தப்பியோடிய சரக்கு வாகன டிரைவரான வேதாளை பகுதியை சேர்ந்த அங்குச்சாமி மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.