கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகளை கோமாரி நோய் அதிகமாக தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக ஆவின் பாலகத்திற்கு அனுப்பப்படும் பாலில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் குறைந்துள்ளது. இதனால் கால்நடை மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.