Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர்  கிராமத்தில் சையது முகமது-அஜிராப்பி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணவன்-மனைவி 2 பேருக்கும்  இடையே  அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜிராப்பி கணவரை விட்டு பிரிந்து தன்னுடைய அண்ணன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அஜிராப்பி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ரிஷிவந்தியம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அஜிராப்பியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |