Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் கோடை விடுமுறையில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வருடமாக பரவிய  கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை. அதனால் வருடம்தோறும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் அரசு பள்ளியில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்ய ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த கோரிக்கைகள் எழுந்துள்ளது.

மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதுபற்றி கலந்தாலோசிக்கபட்டு கடந்த மாதம் முதல் பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கோடை விடுமுறையில் இரண்டாம்கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும் என  கூறப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து விரைவில் காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்திற்கு பணி நிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக மாவட்ட வாரியாக உபரி ஆசிரியர்கள் பட்டியல் பெறப்பட்டு வருகிறது எனவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |