Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்… பொதுமக்கள் கடும் அவதி…!!!!

தமிழகத்தில் நேற்று  8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. அவர்கள் கோடை காலத்தில் அதன் தாக்கம் இன்னும் எப்படி இருக்குமோ என இப்போது நினைக்க வைக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அதனால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு தொப்பி அணிந்தும், துப்பட்டா மற்றும் துண்டு போர்த்தியபடியும், தலைக்கவசம் அணிந்த படியும் சாலைகள் செல்கின்றனர் .

மேலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இயற்கை குளிர்பானங்கள் ஆன இளநீர், நுங்கு, கம்பங்கூழ், தர்பூசணி மற்றும் செயற்கை குளிர்பானங்களை வாங்கி பொதுமக்கள் அருந்தி சூட்டைத் தணித்து வருகின்றனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து தற்போது 100 டிகிரியையும் தாண்டியுள்ளது மக்களை அதிர்ச்சி அடையச்செய்கிறது. அக்னி நட்சத்திர காலங்களில் 110 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி நட்சத்திர காலங்களில் மதிய நேரங்களில் 11 மணி முதல் 4 மணி வரை வீட்டில் இருப்பது மிகவும் நல்லது.

தேவையான அளவு இயற்கை குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் குடிக்க வேண்டும் இதன் மூலமாக கோடைகாலத்தில் ஏற்படும் நோயை தடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

Categories

Tech |