Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

சுவைக்கு உப்பு… உடலுக்கு ஆபத்து… அதிர்ச்சி தகவல்..!!

உப்பினால் வரும் ஆபத்தை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்,

நாம் வீட்டில்  சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடு என்று சொல்வார்கள், நாமும் சூடு சொரணை அதிகமா இருக்கணும் என்று அதிகம் போட்டு சாப்பிடுவோம். ஆனால் அப்படி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் உப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். அதிக உப்பு சேர்ப்பதால் வருடத்திற்கு 25 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்று அந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

உப்பை அதிகம் சேர்ப்பதால் வரும்  விளைவுக்குகள்:

1.ஹைபெர்நாட்ரிமியா: இது வருவதன் காரணம் நம் ரத்தத்தில் சோடியம் அதிகம் இருப்பதே.

2.வயிற்று புற்றுநோய்

3.நீரழிவு நோய்

4.ரத்தக்கொதிப்பு

உப்பு சேர்த்து கொள்ள வேண்டிய அளவு:

ஒரு மனிதன் சாதாரணமாக ஒரு நாளைக்கு  9.2 கிராம் உப்பு உபயோகப்படுத்துகிறான், அதனை குறைத்து 5 கிராம் உப்பு மட்டும் உபயோகப்படுத்தினால் ரத்தக்கொதிப்பு மற்றும் இதயம் சம்மந்தமான நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

 

 

Categories

Tech |