Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பீரோவை உடைத்து… “வீட்டில் பணம் திருட்டு”… 3 பேர் அதிரடி கைது..!!

பாலமேடு பகுதியில் வீட்டில் பணத்தை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியில் சொர்ணவள்ளி என்பவர் வசித்து வந்தார். இவருடைய வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சொர்ணவள்ளி பாலமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதில் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான கோபால், 26 வயதான ரஞ்சித், 20 வயதான விஜய் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வீட்டில் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |