Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பல நாளாக டிமிக்கி கொடுத்த ரவுடி…. ட்ரோன் கேமரா மூலம் பிடித்த போலீசார்….!!

தென்காசி மாவட்டம் பாறையடி 2-வது தெருவை சேர்ந்தவர்  சாகுல்ஹமீது. இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி ரவுடிகள் பட்டியலில் இவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில நாட்களாக கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தென்காசி போலீசார் சாகுல்ஹமீதை தேடி வந்த நிலையில்  தென்காசி பச்சை நாயக்கன் பொத்தை பகுதியை சாகுல்ஹமீத் தன் வசமாக்கி உள்ளதாகவும், அங்கு யாரும் வரக்கூடாது என பொதுமக்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே அங்கு ஆடுமேய்க்க சென்ற பீர்முகம்மது என்பவரை சாகுல்ஹமீது ஆயுதங்களால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அதோடு அப்பகுதிக்கு குளிக்க சென்ற பெண்களையும் மிரட்டி வந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தென்காசி போலீசார், சாகுல்ஹமீதுதை  தீவீரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் சாகுல்ஹமீது பொத்தைகுளம் பகுதியில் உள்ள 50 ஏக்கர் இடத்திற்குள் மறைந்திருந்தது போலீசாருக்குதெரியவந்தது.  இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட போலீஸ்  பறக்கும் கேமரா  உதவியுடன் அவரை தேடும் பணியை மேற்கொண்டனர்.  அங்கு அரிவாளுடன் குளத்தின் நடுவே பதுங்கி இருந்த சாகுல்ஹமீதை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

Categories

Tech |