Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பங்குனி உத்திர திருவிழா…. “சிறப்பு பேருந்துகள்”…. பொதுமக்களின் வசதிக்காக….!!

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று குமரி மாவட்டத்திற்கு பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். இதற்காக அரசு 87 சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. அதாவது நாகர்கோவில் பகுதியில் இருந்து நெல்லை மாவட்டம் சித்தூருக்கு 22 சிறப்பு பேருந்துகளும், திருச்செந்தூருக்கு 15 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து உவரி பகுதிக்கு 15 பேருந்துகளும், மதுரை மாவட்டத்திற்கு 15 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அதன்பிறகு திருநெல்வேலி மாவட்டத்திற்கு 15 பேருந்துகளும், சாத்தான்குளம் பகுதிக்கு 5 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பேருந்துகள் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |