கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக பாகிஸ்தான் நாட்டின் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அசத் உமர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததுள்ளது. இதன் காரணமாக கொரோன கட்டுப்பாடுகள் அனைத்தும் நிக்ககப்படுவதாக அந்நாட்டின் மேம்பாட்டு துறை அமைச்சர் அசத் உமர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சந்தைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுபாடுகளும் நீக்கப்படுகிறது.
அதே சமயத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு கொரோனா கட்டுபாடுகள் நீட்டிக்கப்படும். இதனை அடுத்து கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்படுவதால் பெருந்தொற்று முடிந்து விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். நாம் அனைவரும் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்