தைவான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, “தைவானின் தென்மேற்கில் உள்ள தீவில் நேற்று முன்தினம் திடீரென சீன நாட்டின் மக்கள் விடுதலை ராணுவம் விமானப்படையின் Y-8 எலியன்ட் ஸ்பாட்டர் விமானம் காணப்பட்டது. இதையடுத்து உடனடியாக சீன விமானத்தை தங்களுடைய நாட்டிற்கே திரும்பி செல்லும்படி வானொலி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.
அதோடு மட்டுமில்லாமல் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் இந்த புலனாய்வு விமானத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக பயன்படுத்தினோம். இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ஜனவரி 23 அன்று ஒரேநாளில் 39 சீன விமானங்கள் தைவான் எல்லைக்குள் ஊடுருவியுள்ளன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.