அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வாய்ப்புகள் உள்ள நிலையில் இலவச தையல் பயிற்சி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஆடைகள் தயாரிப்பு என்று பார்த்தால் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த சார்பு நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஏராளமான செயல்பட்டு வருகிறது. பொதுவாக பின்னலாடை என்பது ஒரே இடத்தில் மட்டுமே தயாரிக்கப்படுவது இல்லை. ஜாப் வொர்க் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னலாடை நிறுவனங்களில் வேலைக்குச் செல்கிற தொழிலாளர்கள் தையல் தெரிந்திருந்தால் முன்னுரிமை அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள். அந்த அளவிற்கு தையல் கலைக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்ட புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய கல்விக் கொள்கையின் படி குறுகிய கால பயிற்சி அளிக்கும் பயிற்சி மையம் மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது. அதன்படி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இயந்திரம் இயக்குபவர் கையினால் எம்ப்ராய்டிங் செய்பவர் ஆகிய தொழில் பிரிவுகளுக்கு குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சிக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் தாராளமாக சேர்ந்துகொள்ளலாம். கல்லூரி படித்த அல்லது இடைநின்ற மாணவிகளும் இந்த பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சியை முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளதால் வேலை இல்லாத பெண்களும் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதல்வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.