குடும்பத் தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே நரசிங்கராயர் பேட்டையில் செல்வகுமரன்- செல்வி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் செல்வகுமரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வி கணவனை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த செல்வகுமரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் செல்வகுமரனை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து செஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.