பனை மரத்தில் ஏறிய தொழிலாளி திடீரென தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள வண்ணாங்குண்டு பகுதியில் அப்துல்ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு 7 மகள்கள் மற்றும், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அப்துல்ரகுமான் நாகநாத சமுத்திரம் பகுதியில் பனைஓலை வெட்டுவதற்காக சென்றார்.
அப்போது அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் இருந்த பனைமரத்தில் ஏறியபோது திடீரென அப்துல்ரகுமான் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அப்துல்ரகுமான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.