Categories
தேனி மாவட்ட செய்திகள்

1 மாதத்திற்குள் ஏற்பட்ட பிரிவு…. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்…. 4 பேருக்கு வலைவீச்சு….!!

தொழிலாளியை காரில் கடத்தி சென்று தாக்கிய மனைவியின் சகோதரர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் தாடிச்சேரி பகுதியில் வசித்து வரும் நவநீத கிருஷ்ணன்(26) என்பவர் கோவையில் மார்கெட் ஒன்றில் பரிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் கம்பத்தை சேர்ந்த பிருந்தா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த 1 மதத்திலேயே கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்தது வசித்து வருகின்றனர்.

இதனையடுத்து சம்பவத்தன்று பிருந்தாவின் சகோதரன் பிரதீப் மற்றும் அவரது உறவினர்களான அய்யணன், சுரேஷ் உள்பட 4 பேர் கோவைக்கு சென்று நவநீதகிருஷ்ணனை தாக்கி கம்பத்திற்கு கடத்தி சென்றனர். இதனைதொடர்ந்து பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதன் மலைபகுதிக்கு அழைத்து சென்று நவநீதகிருஷ்ணனை கட்டையால் பயங்கராமாக தாக்கிவிட்டு அவரை கம்பத்தில் இறக்கிவிட்டு சென்றனர்.

இதில் பலத்தகாயமடைந்த அவரை சிலர் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் தென்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பிரதீப், அய்யணன், சுரேஷ் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |