Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ராசிபலன் 16.01.2020… மேஷம் முதல் மீனம் வரை..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அன்றாட பணிகளில் தடைகளும் தாமதங்களும் வந்து செல்லும். ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். பிரியமான சிலரிடம் யோசித்து பேசும் சூழ்நிலை ஏற்படலாம். இன்று  தொழில் வியாபாரத்தில் பணம் தேவை ஏற்படும். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டியிருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும், கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் இன்று ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம்  அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும், அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

 

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பழைய பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரக்கூடும். பணம் எவ்வளவு வந்தாலும் உடனடியாக விரயம் ஏற்படும். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லபடியாக நடந்தேறும். இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம் அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு வாகனம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் இருக்கும்.

பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். உறவினர்களிடம் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகயிருக்கும். அதுமட்டுமில்லாமல் சக பணியாளர்கள் உங்களுக்கு தொல்லை தருவதாக இருந்தால் கொஞ்சம் சற்று விலகி இருப்பது ரொம்ப நல்லது. இன்று தெய்விக நம்பிக்கை கூடும், ஆன்மீக  எண்ணங்கள் மேலோங்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். கரு நீல நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவிலேயே  இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாளாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். தொழில் போட்டிகளில் சமாளிப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பயணத்தால் எதிர் பார்த்த பலன் கிடைக்கும். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்க்கும் லாபம் சிறப்பாக வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறனை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு உதவியும் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்துமே முன்னேற்றமான சூழ்நிலை யில் இருக்கும் இருந்தாலும் என்று நீங்கள் கொஞ்சம் பொறுமையை கடைபிடியுங்கள். அக்கம் பக்கத்தினரிடம்  கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்

 

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும்.  அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். கூடுமானவரை அனைத்து காரியத்தையும் இன்று சிறப்பாக செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் உண்டாகும். பெண்கள் சிறிய அளவில் நன்மையையும்  பொறுமையும் பெறக்கூடிய காலகட்டமாக இன்றைய நாள் இருக்கும். வேண்டிய அளவில் அனைத்து விஷயங்களும் கிடைக்கும்.  இன்று லாபமும் சன்மானமும் உங்களுக்கு உயரும் நாளாகவே இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். கருநீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் கருநீலம்

 

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று நன்மைகள் நடைபெறும் நாள் ஆக இருக்கும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் இருக்கட்டும். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை  மேலோங்கும். வீடு வாங்கும் யோகம் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு வாகனம் வாங்குவது அல்லது புதிப்பிப்பதில் தான் இன்று நாட்டம் செல்லும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் திருப்தியை கொடுக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

இன்று உணர்ச்சிவசப்பட்டு மட்டும் யாரிடமும் பேசி விடாதீர்கள். ரகசியத்தை தயவுசெய்து பாதுகாத்திடுங்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய செயல்களில் உறுதித்தன்மை இருக்கும்.  கடன் தொல்லை மட்டும் கொஞ்சம் தலை தூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். யாருக்காகவும் எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவிலிருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு மற்றும் சிவப்பு

 

கன்னி ராசி அன்பர்களே..!! உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாளாக இருக்கும். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்து பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். வழக்குகள் சாதகமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். காரியத்தடை, வீண் அலைச்சல், டென்ஷன் போன்றவை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்.

குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். எல்லாவற்றிலுமே சாதகமான பலனை இன்று அனுபவிக்க கூடும். பொருளாதார முன்னேற்றம், பணவரவில் திருப்தி ஆகியவையும் இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் . பெண்கள் அடுத்தவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேசுவது சிறந்தது. அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் பொறுமையைக் கடைபிடித்து வெற்றி காண்பீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும்.தொகை கேட்ட இடத்தில் வந்து சேரும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அனுகூலமாக  நடந்துகொள்வார்கள். இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய வேண்டியிருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மற்ற தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே உங்களுடைய கவனம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்லுங்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். உங்களுடைய உறவில் திருப்திகரமான சூழ்நிலை காணப்படும் பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு எப்போதுமே அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

 இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்

 

விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று தைரியத்தோடு செயல்படவேண்டிய நாளாக இருக்கும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது சிறப்பு. தடைகளை முறியடிப்பீர்கள். தனவரவு போதுமானதாக இருக்கும். நூதன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். இன்று வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலர்ஜி போன்றவை உண்டாகலாம்.

கனவுகளால் தொல்லை ஏற்படும். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழலில் இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு விலகி செல்லும், கவனமாக இருங்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் கொஞ்சம் கெடுக்கும்.குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்துப் பேசுவார்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறம்

 

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாளாக இருக்கும். வருங்கால நலன் கருதி புதிய முடிவுகள் எடுப்பீர்கள். இடம் பூமி விற்பனையில் பிரச்சனை கொஞ்சம் ஏற்படும். தொழில் மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் உருவாகும். இன்று காரியத்தடை தாமதம் கொஞ்சம் உருவாகலாம். திடீர் மன வருத்தங்கள் போன்றவை ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்.

பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். எல்லா வகையிலும் இன்று நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். விட்டுச் சென்ற நண்பர் மீண்டும் வந்து சேருவார்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

 

மகரம் ராசி அன்பர்களே…!! எதிர்பாராத வகையிலே நிதிநிலை உயரும்.  நீடித்த நோய் அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும், குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்யவேண்டியிருக்கும்.

பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுங்கள் அது போதும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும் பொழுது கவனமாக இருங்கள். இன்று பணத் தேவை கொஞ்சம் இருக்கும். அது மட்டுமில்லாமல் செலவும் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்க கூடிய அளவில் இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து  காரியமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு

 

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வருமானம் வரும் வழியை கண்டு கொள்வீர்கள். உங்கள் ஆலோசனைகளை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவார்கள். உத்யோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மையை கொடுக்கும்.

மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது சிறப்பு. எதிர்ப்புக்கள் குறையும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறப்பு, கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது.  எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப சிறப்பு. இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் ரொம்ப பொறுமையாக செல்லுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கக்கூடிய அளவிலிருக்கும், அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்

 

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று  மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும். மறதியால் விட்டுப்போன பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். இன்று அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும். ஆனால் கவனமாக ஒரு சில காரியங்களை மேற்கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும் ஆனால் நல்ல பலனைக் கொடுக்கும்.

குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுடைய செயல் திறமை அதிகரிக்கும். மற்றவர் பார்வையில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு முன்னேறி செல்வீர்கள். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும் திருமண முயற்சிகள் சிறப்பாக நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் மஞ்சள் நிறம் அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |