தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது , தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை யொட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது.மேலும் இது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 19-ந் தேதி காலை நிலவக்கூடும்.
இதையடுத்து இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து வருகிற 20-ந் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் இது மார்ச் 21-ந் தேதி புயலாக வலுப்பெற்று வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் மார்ச் 22-ந் தேதி காலை நிலைபெறக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.