கடந்த 19 வருடங்களுக்கு முன்பு பாட்னா ரெயில் நிலையத்தின் அருகில் ஒரு பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. அங்கு பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்தி வந்த ஒரு தம்பதியினர் அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தனர். அப்பெண் குழந்தைக்கு ஜோதி என்று பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில், எந்த குழந்தையும் பிச்சை எடுக்க தொடங்கியது. சிறு வயதில் இருந்தே ஜோதிக்கு படிப்பின் மேல் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் நமது வளர்ப்பு பெற்றோர்கள் பிச்சை எடுப்பதால், அந்த சிறுமியால் படிக்க இயலவில்லை. பிச்சை எடுப்பது மட்டுமின்றி சிறுமி மறுபக்கம் குப்பைகளை அள்ளிப் போடவும் ஆரம்பித்துள்ளார்.
பிச்சை எடுத்து வேலைகள் செய்து வந்தாலும், கல்வி கற்கவேண்டும் என்பது மட்டும், அவர் மனதில் ஒருபக்கம் ஓடிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் பாட்னா மாவட்டம் நிர்வாகம் ராம்போ அறக்கட்டளை ஒன்றின் உதவியுடன் ஜோதியை படிக்க வைக்க வேண்டும் என்று முன் வந்தது. இந்த ராம்போ அறக்கட்டளையின் சார்பாக கல்வி கிடைக்க முடியாமல் சிரமப்பட்டு வரும் ஏழைக் குழந்தைகளுக்கு பகுதி நேர மற்றும் முழு நேர கல்வி அளித்து வந்துள்ளனர். அதன்படி இந்த நிலையில் அவர்களின் உதவியுடன் மெட்ரிக்குலேஷன் தேர்வில் ஜோதி வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து உபேந்திரா மஹாரதி நிறுவனத்தில் ஓவியக்கலை பயிற்சியையும் ஜோதி முடித்தார். தற்போது 19 வயதாகும் ஜோதிக்கு ஒரு நிறுவனத்தின் கஃபேவை நடத்தும் வேலை கிடைத்துள்ளது.
இதனால் ஜோதி பகல் நேரங்களில் கஃபேவை நடத்துகிறார். பிற நேரங்களில் கல்வியிலும் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் ஜோதி வாடகை வீடு ஒன்றினை எடுத்து, தனது சொந்த பணத்தில் வசித்தும் வருகிறார். மார்க்கெட்டிங் பீல்டில் பெரியளவில் சாதிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும் ஜோதி, இன்னும் படிப்பைத் தொடர்ந்து பலருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவிக்கிறார். இவ்வாறு ஜோதி போன்ற பல்வேறு குழந்தைகள் நமது நாட்டில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஜோதி ஒரு முன்னுதாரணம் ஆவார்.