தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்த உத்தரவால் மாவட்ட போலீசார் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
காஞ்சிபுரத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல்துறையின் ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபுவை வடக்கு மண்டல ஐஜி டிஐஜி சத்யப்ரியா, மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற காஞ்சிபுரம் சரக காவல் துறையினருக்கான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது “காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் குற்றங்களை தடுப்பதற்காகவும், காவல் துறையை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பழைய குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக மூன்று மாவட்டங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சட்டம்-ஒழுங்கை காக்க ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க தீவிரப் படுத்தப் பட்டு வருகின்றது.
பொதுமக்கள் கொடுக்கும் புகாரின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் குறைகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். ஆயுதப்படை முறையாக நடைபெற வேண்டும்” என்று தெரிவித்தார். பின்னர் காஞ்சிபுரத்தில் போதை பொருள் கடத்தல், சட்ட ஒழுங்கைப் பேணி காத்தல் மற்றும் சவாலான குற்ற வழக்குகளில் தீவிர முயற்சி எடுத்து கடைப்பிடித்தல் போன்ற பணிகளை அர்ப்பணித்து உணர்வுடன் நற்செயல் ஆற்றிய 10 குழுக்களை சார்ந்த காவலர்களுக்கு வெகுமதி அளித்து பாராட்டினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல்துறை கண்காணிப்பாளர்கள், பயிற்சி உதவி கண்காணிப்பாளர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.