Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்-லில் சுரேஷ் ரெய்னா…. இந்தப் பயிற்சியாளரும் இருக்கிறார்…. என்ன ரோல் தெரியுமா….?

சுரேஷ் ரெய்னாவும் ரவி சாஸ்திரியும் ஐபிஎல் போட்டிக்கு வர்ணனையாளராக களமிறங்கவுள்ளனர்

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கியவர சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பு வாய்ந்த வீரராக அவர் இருந்த போதும் இந்த ஆண்டின் தொடருக்கான ஏலத்தில் எந்த அணியும் சுரேஷ்  ரெய்னாவை  எடுக்கவில்லை. அதோடு மாற்று வீரராக கூட யாரும் அவரை தேர்ந்தெடுக்கவில்லை.

இதனிடையே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து சிறந்த வர்ணனையாளராக  மாறிய ரவி சாஸ்திரி 2017ஆம் ஆண்டிற்கு பிறகு வர்ணனை செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில்  இருந்து விலகிய ரவி சாஸ்திரியை பல அணிகள் பயிற்சியாளராக நியமிக்க விரும்பினர். ஆனால் ரவி சாஸ்திரி எந்த அணிக்கும் பிடி கொடுக்கவில்லை. ஆனால் தற்போது சுரேஷ் ரெய்னா மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் ஐபிஎல் தொடரில்  ஹிந்தியில் வர்ணணை செய்ய இருக்கின்றனர்.

 

 

Categories

Tech |