உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வென்று தோல்வியை தழுவியது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவே தங்கள் கட்சி ஜெயிக்கும் என்று நினைத்து சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர் ஒருவர் பாஜகவின் ஆதரவாளர்களுடன் பந்தயம் வைத்துள்ளார். அதாவது சமாஜ்வாதி கட்சி தோற்றால் தனது இரு சக்கர வாகனத்தை தருவதாக அந்த கட்சியின் ஆதரவாளரும் பாஜக தோற்றால் தனது டெம்போவை தருவதாக பாஜகவின் ஆதரவாளரும் பந்தயம் கட்டியுள்ளனர்.
ஆனால் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சமாஜ்வாதி கட்சி தோல்வியுற்றது இதுகுறித்து பந்தயம் கட்டிய அக்கட்சியின் ஆதரவாளர் பேசியபோது, “தேர்தலின் முடிவுகள் வெளியானதோடு நான் சொன்னது போலவே பந்தயத்தில் என்னுடைய பைக்கை கொடுத்து விட்டேன். பின்னர் எங்கள் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் செல்போன் மூலம் இனி இதுபோல பந்தயங்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தினார் அதுமட்டுமில்லாமல் செயின் ஒன்றை பரிசாக அளித்தார்” என்று கூறினார்.