உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதாகையுடன் நேரலையில் தோன்றி கைது செய்யப்பட்ட செய்தியாளர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாகப் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவின் ஒரு அரசு செய்தி தொலைக்காட்சியில் மெரினா ஓவ்சியனிகோவா என்ற பெண் செய்தியாளர் நேரலையின் போது ‘போரை நிறுத்துங்கள்’ என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் வந்திருக்கிறார். அவர் வைத்திருந்த பதாகையில், ‘போரை நிறுத்துங்கள்’, ‘பிரச்சாரத்தை நம்பவேண்டாம்’, ‘உங்களிடம் பொய் கூறுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து ரஷ்ய அரசிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி, காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதன் பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பத்து நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பின்பு, அவர் தனக்கு ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி, நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கியதோடு 21,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார்.