Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மருத்துவச் செலவு தொகை தரல…. காப்பீடு நிறுவனம் மீது புகார்…. ஓய்வூதியர்கள் போராட்டம்….!!

நாகை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூட்டத்தில் பேசினார். அவர் கூறியது ஓய்வூதியர்கள் தங்களது மருத்துவ சிகிச்சைக்காக பிடித்து வைத்துள்ள செலவுத் தொகையை திரும்பி வழங்காத காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்தும் மற்றும் மத்திய அரசு வழங்குவது போல் மருத்துவ படியை ரூ.1000 உயர்த்தி வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில்  மாவட்ட பொருளாளர்  முருகேசன் நன்றி கூறினார்.

Categories

Tech |