கூடுதலாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கொட்டையூர் குடியநல்லூர், வேங்கைவாடி, சித்தலூர், பனையங் கால், புக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து மாணவ- மாணவிகள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி முடிந்து மாணவ- மாணவிகள் வீடு திரும்பும்போது ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே இந்த பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே கூடுதல் பேருந்து வசதி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.