சமந்தா ஃபேமிலி மேன் வெப் தொடரை தொடர்ந்து தற்போது புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்கின்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் படங்கள் மட்டும் அல்லாமல் வெப் தொடரிலும் நடிக்கின்றார். இவர் நடித்த ஃபேமிலி மேன் தொடர் நன்றாக ரீச் ஆகி பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இந்த வெப் தொடரில் இவர் கவர்ச்சியாக நடித்து வந்ததால் பல விமர்சனங்களுக்குள்ளானார்.
இதன் காரணமாகவே இவருக்கும் கணவர் நாக சைதன்யாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அண்மையில் பிரிந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சமந்தா தற்போது மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்கிறார். இந்த தொடரை ராஜ் மற்றும் டீ.கே இயக்குகின்றனர். ஹீரோவாக வருண் தவான் நடிக்கின்றார். மேலும் இந்த தொடரின் ஷூட்டிங்கில் சமந்தா இணைந்து இருக்கின்றாராம்.