Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

போடு… “பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி”… வெளியான மாஸ் அப்டேட்…!!!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் 2வது சிங்கிள் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான அரபிக் குத்து பாடல் ஹிட்டாகி அனைவரையும் முணுமுணுக்க செய்து வருகின்றது. அடுத்தடுத்து படத்தின் அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் 2வது சிங்கிள் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பாடியுள்ள இந்த பாடலுக்கு “ஜாலியோ ஜிம்கானா” என்று பெயரிடப்பட்டுள்ளது. பாடலின் தலைப்புக்கு ஏற்ப ஒரு ஜாலியான ஃபீல் கொடுக்கும் பாடலாக இது அமைகின்றது. படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் பல சாதனைகளை அடித்து நொறுக்கியுள்ளது. இதனால் 19ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் பாடல்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Categories

Tech |