உக்ரைனில் 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் அந்நாட்டிலிருந்து சுமார் 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருகின்றனர். ஐ.நா அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது . இருப்பினும் உக்ரைனில் உள்ள நகரங்களில் இன்னும் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிற்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் பசி, தாகத்தினால் ஏராளமான பொது மக்கள் அகதிகளாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அதிகபட்சமாக போலந்தில் 18 லட்சம் பேர் புகலிடம் கேட்டு தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.