Categories
சினிமா தமிழ் சினிமா

“கதறு கதறு… இந்த வருசம் முழுக்க கதறு”…. அஜித் ரசிகர்களை விடாமல் சீண்டும் ப்ளூ சட்டை….!!!

நடிகரும் பத்திரிகையாளருமான ப்ளூ சட்டை மாறன் படங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றார். இவர் இயக்குனர்கள், நடிகர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் விமர்சனம் செய்து வருகின்றார்.

இவர் முன்னணி நடிகர்களையே பெரும்பாலும் விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் அண்மையில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் உருவ கேலி செய்து விமர்சித்ததற்கு ரசிகர்கள் உட்பட திரைப்பிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித்தின் நெகடிவ் கமெண்ட்களை தேடி தேடி அவரின் ரசிகர்களை விமர்சித்து பதிவிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்கள் பதிலடி கொடுப்பதையும் கொண்டாட்டமாக சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதில் “ஆஹா.. ஆழ்வார் பாய்ஸ் ட்ரிக்கர் ஆகி கமன்ட்ல கதறி அழுக ஆரம்பிச்சிட்டானுங்க. பாவம். வெரி ஹாப்பி… என ஸ்கூல் பாய்ஸ் போல பதிவிட்டுள்ளார் . மேலும் வேறொரு பதிவில் கதறு கதறு. இந்த வருசம் முழுக்க கதறு. கமன்ட் போட்டு கதறு. திட்டி திட்டி வாய் வலிக்க கதறு. எனக்கு செம டைம் பாஸ். ஓயாம கதறு. ஓங்கி சத்தமா கதறு” என்றுஅஜித் ரசிகர்களை குறிவைத்து தாக்கி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

Categories

Tech |