Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (15.01.2020) பொங்கல் தின ராசிபலன் எப்படி இருக்கு?

மேஷம் ராசி அன்பர்களே…!! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை  போல எதிரிகள் தவிடுபொடியாகும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று செயல்களில் சீர்  திருத்தம் இருக்கும். தொழில் வியாபாரம் பெருகுவதற்கு கூடுதலாகவே பணிபுரிவீர்கள் பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். உறவினரின்  ஆதரவால் நம்பிக்கை  மேல்ஓங்கும். இன்று  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.

லாபம் கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதைக் கேட்டு தடுமாற்றம் கொஞ்சம் அடையலாம் பார்த்துக்கொள்ளுங்கள்நிதானமாக எதையும் யோசித்து செய்யுங்கள் அது போதும். பணவரவை பொறுத்தவரை இன்று  திருப்திகரமாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும்  மிகவும்  நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் காவிரி  நிறம் 

 

ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி செல்லும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். இன்று வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இ ன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவிக்கு இடையில் இருந்த சங்கடங்கள் தீரும் . பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும்.

இன்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கூடும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் சிறப்பாகவே செய்வீர்கள். அதுமட்டுமில்லாமல் பெண்கள் எந்த ஒரு வேலையையும் மனத்திருப்தியுடன் செய்வார்கள். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி ஏற்படும்.இன்று  பணவரவை பொருத்தவரை தாராளமாக இருக்கும்.

இன்று வெளியூர் பயணங்களை மேற் கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது  வெள்ளையநிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் மிகவும் சிறப்பாக நடக்கும்

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :    மேற்கு

அதிர்ஷ்ட எண் :     4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் காவி நிறம்

மிதுனம் ராசி அன்ப ர்களே..!! இன்று பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும் .தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். கூடுதல்  வருமானம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று பணியாளர்களுக்கு  நல்ல சலுகை கிடைக்கும் .இன்று உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் .தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். பார்த்துக்கொள்ளுங்கள்

இன்று பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் இருக்கும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டக் கூடியதாக அமையும் .எனவே வீண் வாக்குவாதங்களில் மட்டும் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். இன்று தெய்வ நம்பிக்கை கூடும் தெய்வத்திற்க்காக  சிறு தொகையையும் செலவிட நேரிடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் . இன்று மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துமே சிறப்பாக நடக்கும்

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை  ;  கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

 

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படலாம். குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம் .கடின உழைப்பால் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும் .பணத்தேவை அதிகரிக்கும். இன்று பயணத்தில் மாற்றம் ஏற்படும். இன்று வீட்டில் உள்ள பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். எந்த சூழ்நிலையிலும் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது

இன்று எந்த ஒரு காரியத்திற்கும் நீங்கள் டென்ஷன் ஆக வேண்டாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் .உறவினர்கள் மத்தியில் பழைய பகைகள் மாறும் .இன்று ஓரளவு அதிஷ்ட்டகரமான  படைப்புகள் நடக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும் நாளாக இன்று இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துமே சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை  : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும்  9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

 

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று சிரமத்தினை பிறரிடம் சொல்ல வேண்டாம். செயல் நிறைவேற ஒருமுகத்தன்மை அவசியம். தொழிலில் சராசரி உற்பத்தி இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். உடல் ஆரோக்கியத்துக்கு சிகிச்சை பெறுவது நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் கொஞ்சம் தலை தூக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மன அழுத்தம் போன்றவை ஏற்படும். உத்யோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. இன்று எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக தான் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பஞ்சாயத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அணைத்து  காரியம் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்

 

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று மனதில் நம்பிக்கை உண்டாகும், தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும், நிலுவைப்பணம் வசூலாகும். போட்டியில் வெற்றி பெற அனுகூலம் உண்டாகும், விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும், குடும்பத்தில் அமைதி நிலவும், திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும்.

எதிர்பாராத வீண் செலவு கொஞ்சம் ஏற்படலாம், வீண் பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனமாக இருங்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகிச் செல்லும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :வடக்கு

அதிர்ஷ்ட எண் :5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று நிதானித்து செயல்படுவது ரொம்ப நல்லது.  தொழில் வியாபாரத்தில் வழக்கத்தை விட பணி சுமை அதிகரிக்கும். சீரான அளவு பண வரவு கிடைக்கும். பெண்கள் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று எடுத்த காரியத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும்.

கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. இன்று ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும், மனகுழப்பம் நீங்கும். நண்பர்கள் உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை ஏற்படும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கருநீலம் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். கருநீலம் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டும் அல்லாமல்இன்று சிவா ஒருமானின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அணைத்து காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 9

அதிஷ்ட நிறம் : கருநீலம் மற்றும் மஞ்சள் நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற மாற்றங்கள் செய்வீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உறவினர் மதித்து சொந்தம் பாராட்டுவார்கள். இன்று எல்லா நன்மைகளும் கிடைக்கும். வீண் அலைச்சல் குறையும், கோபமான பேச்சு டென்ஷன் குறையும், எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும்.

சகோதரர் வழியில் நன்மை உண்டாகும், மனதில் துணிச்சல் அதிகரிக்கும், புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம்கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும், வியாபாரம் தொழில் தொடர்பான கடினப் போக்கு நல்ல பலனைக் கொடுக்கும் இன்று பயணம் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் நினைத்த காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

 

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சிறிய செயலும் கடினமாகவே தோன்றும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரியாக இருக்கும். பண செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதாக இருக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் சீராக தான் இருக்கும்.பூமி வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். சகோதரர்களுடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.

அவ்வப்போது மனதில் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாயின் உடல்நிலையில் கவனமாக இருங்கள். வீண் செலவுகளை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற மன சஞ்சலம் கொஞ்சம் இருக்கும். இன்று புத்தாடைகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.  அதுமட்டுமில்லாமல் யாருக்கும் ஆபரணங்களில் நீங்கள் கடனாகக் கொடுக்க வேண்டாம். இதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெளிர்  நீலம்

 

மகரம் ராசி அன்பர்களே…!! இன்று செயலில் திறமை நிறைந்து இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மகிழ்வை கொடுக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். அரசு சார்ந்த அனுகூலம் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்து சேரும்.

வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலக பொருட்களை கவனமாக கையாள வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் கோபத்தைக் காட்டாமல் பேசுவது நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண் :3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

 

கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நல்லவர்களின் நட்பு மனநிறைவை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். வாழ்வில் இனிய அனுபவம் ஏற்படும். இன்று இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுங்கள்.எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப கவனமாக மேற்கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து ஏதும் போடாதீர்கள். பணம் நான் வாங்கித்தருகிறேன் என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டு யாருக்கும் பணத்தை வாங்கிக் கொடுக்காதீர்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுதல் நல்லது. ஆரஞ்சு நிறம்  உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண் :1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு

 

மீனம் ராசி அன்பர்களே…!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபார வளர்ச்சி நிறைவேறும். வரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு உண்டால் உடல் நலம் சீராகும். தியானம், தெய்வ வழிபாடு செய்வீர்கள். இன்று கோபம் படபடப்பு குறையும். மற்றவருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு ஏற்படும். திடீர் பிரச்சினைகளும் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை இருக்கும் ஆகையால் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.

கூடுமானவரை உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். பெண்கள் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி விடுவதும் நன்மையை கொடுக்கும். கூடுமானவரை இன்று நீங்கள் யாருக்கும் எந்தவிதமான பஞ்சாயத்துகளும் செய்ய வேண்டாம்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே  இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும்  பச்சை நிறம்

Categories

Tech |