இந்தியாவுக்கு சலுகை விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் தர உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கச்சா எண்ணெயை சரக்கு கப்பல்கள் வாயிலாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் பொறுப்பையும், காப்பீட்டையும் ரஷ்யாவே ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 100 டாலருக்கும் குறைவாகவுள்ள நிலையில் ரஷ்யாவில் இருந்து 3.50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வர இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை எனவும் மாறாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.