Categories
மாநில செய்திகள்

கீழடியில் அகழாய்வு….  8-ஆம் கட்ட பணியில் கிடைத்த அற்புத பொருள்…. என்ன தெரியுமா?….!!!!

கீழடியில் உள்ள 8-ம் கட்ட ஆய்வு பணியில் 4 அடி ஆழத்தில் தோண்டும் பொழுது சிதைந்த நிலையில் பெரிய வடிவிலான மண் பானையும், முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் மத்திய அரசு சார்பாக மூன்று கட்டங்கள் ஆய்வுப் பணியும், மாநில அரசு சார்பாக நான்கு கட்ட ஆய்வு பணியும் நடந்து முடிந்துள்ளன. தற்போது வரை மொத்தம் ஏழு கட்ட ஆய்வு பணிகள் நடந்து உள்ளது. இதில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழமையான 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் கட்ட ஆய்வு பணி தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகின்றது. இந்த குழியில் சுமார் 4 அடி ஆளத்தில் தோண்டும்போது சிதைந்த நிலையில் பெரிய வடிவிலான மண் பானை கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு குழியில் 6 அடி ஆளத்தில் நம் முன்னோர்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய செங்கற்கள் ஒரே இடத்தில் வரிசையாக கிடைத்தன. இங்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் அனைத்தும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகளின் மூலம் தமிழர்களின் தொன்மையான நாகரிகம் குறித்த தகவல்கள் தெரியவரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |