Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை”… கடுப்பான பாண்டிராஜ் தக்க பதிலடி…!!!

அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் குறித்து விமர்சித்த ப்ளூ சட்டையை கடுமையாக விமர்சித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

நடிகரும் பத்திரிகையாளருமான ப்ளூ சட்டை மாறன் படங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றார். இவர் இயக்குனர்கள், நடிகர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் விமர்சனம் செய்து வருகின்றார். இவர் முன்னணி நடிகர்களையே பெரும்பாலும் விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் அண்மையில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் உருவ கேலி செய்து விமர்சித்ததற்கு ரசிகர்கள் உட்பட திரைப்பிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குனர் பாண்டிராஜ் கூறியுள்ளதாவது, “விமர்சனம் என்பது மருந்து கொடுப்பது போலத்தான். சில இடங்களில் வீக்காக இருக்கின்றது. அதை சரி செய்து கொள்வதற்காகத்தான். விமர்சனங்களை தேன் தடவி கொடுக்க வேண்டாம். ஆனால் விஷத்தை தடவி கொடுக்காதீர்கள். கேவலமாக திட்டி அதுல வர்ற லைக் கமெண்ட்ஸ்னால தான் உங்களுக்கு காசு வருதுன்னு உங்க பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் இந்த காசுல தான் சாப்பிடறோம்னு வெட்கப்பட மாட்டாங்களா? இதுபோல நான் பேசினா உங்களுக்கு கோவம் வருமா? வராதா? சினிமாவில்தான நீங்களும் வாழ்ந்துகிட்டு இருக்கிறீர்கள். இதன் மூலம்தான் உங்கள் குடும்பமும் இருக்கின்றது. அந்த சினிமாவுக்கு நீங்க மரியாதை கொடுக்கணும் சொல்ற வார்த்தை தான் இருக்கு. நடிகர்களை உருவத்தை கேவலமா பேசுறது.. ஒரு நல்ல விஷயத்தை கம்மியா தான் பார்ப்பாங்க, சண்டை போட்டா நல்லா பார்ப்பாங்க. அதுக்காக அடிச்சுக்க முடியுமா அதுக்காக நம்ம வரல”… என்று ப்ளூ சட்டை மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Categories

Tech |