Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் காப்பீடு திட்டத்தின் அட்டை”…. நாடு முழுவதும் விநியோகம்…. தமிழக மக்களுக்கு கை கொடுக்குமா?…..!!!!

தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு மருத்துவக் காப்பீடு திட்டங்கள் செயல் முறையில் இருந்து வரும் நிலையில், தற்போது இந்தியாவின் பிரதமர் மோடி தன் நாட்டு மக்களுக்காக ஒரு மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் வாயிலாக பலரும் பயனடைய இருக்கின்றனர். இத்திட்டம் இந்தியாவிலுள்ள 50 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அத்துடன் இத்திட்டத்தை சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து இத்திட்டத்தில் சேர இருப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணம் இன்றி சிகிச்சை வழங்கப்படும்.

குறிப்பாக இத்திட்டத்தில் சேர வயது வரம்பு மற்றும் நோயின் நிலையோ தேவை இல்லை என்று தெரிவித்துள்ளனர். இப்போது இத்திட்டத்திற்கான அட்டைகளை நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் சார்பாக விநியோகம் செய்து வருகின்றனர். அதன்பின் தற்போது கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் நகரில் உள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சியில் கேசரியா ஹிந்து வாகினி அமைப்பு சார்பாக பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் நலவாரிய அடையாள அட்டை மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, 100-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிகாரிகள் பேசுயபோது அமைப்புசாரா தொழிலாளர்களை நலவாரியத்தில் ஒன்றிணைத்து அவர்களின் விபரங்களை மத்திய அரசு சேகரித்து வருகிறது. அதற்கான பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் தங்கள் ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ்புக் நகல் ஆகியவற்றுடன் மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர ரேஷன் கார்டு கட்டாயமான தேவையாக இருக்கிறது. அதன் மூலம் விண்ணப்பித்து காப்பீடு அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த காப்பீடு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் 5 லட்சம் ரூபாய் வரையிலும் இலவச காப்பீடு பெறலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மகாலிங்கம், வாழும் கலை பயிற்சி ஆசிரியர் நாராயணசாமி, தங்கவேல், கேசரியா ஹிந்துவாகினி நிர்வாகிகள் விக்னேஷ், ஆனந்த் போன்றோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Categories

Tech |