கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான சிறப்பு தணிக்கை குழு அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க சார்பில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து இருப்பவர்களின் நகையை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு பின் இந்த நகைகள் தள்ளுபடி செய்வதில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக நகைக்கடன் தள்ளுபடி வழங்குவதில் பல நிபந்தனைகள் புகுத்தப்பட்டது. அதில் ஏற்கனவே பயிர் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் நகை கடன் தள்ளுபடி பெற முடியாது , எனவும் வீட்டில் ஒருவருக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி வழங்கப்படும், எனவும் அரசு ஊழியர்கள் இத்தகைய நகை கடன் தள்ளுபடி பெற முடியாது எனவும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்திருந்தது.இதன்படி நகைக்கடன் பெற்றவரின் பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கத்தின் விவரம், கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல், குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து இந்த நிபந்தனைகளுக்கு உட்படுவார்களா என பகுத்து ஆய்வு செய்து சரியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
இவ்வாறு வாடிக்கையாளர்களின் விவரங்களை பகுத்தாய்வு செய்து தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தது. மேலும் நகை கடன் தள்ளுபடி பெற தகுதியுடையவர்கள் விவரங்களை தணிக்கை செய்ய மண்டல மற்றும் மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இறுதியாக நகை கடன் பெற தகுதியானவர்கள் பட்டியல் வெளியானது. அதில் 13,50,000 ஏழை எளிய மக்கள் நகை கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசின் தணிக்கைக் குழு வரும் மார்ச் 15-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன்பின் நகைகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.