Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊதிய உயர்வு வழங்க வேண்டும்…. மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை…. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்….!!

ஊதிய உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ல் பேச்சுவார்த்தை நடத்தியபடி ஊதிய உயர்வுக்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும், அடிப்படை பதவிகளுக்கான காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளர் தண்டபாணி, பொருளாளர் சக்திவேல், செயல் தலைவர் சசிகுமார், அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன் மற்றும்  மின் வாரிய பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Categories

Tech |